குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் பள்ளி!

Share this News:

அஹமதாபாத் (09 ஜன 2020): குஜராத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

அஹமதாபாத் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் போஸ்ட் கார்டில் பிரதமருக்கு குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடிதம் எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் போஸ்ட் கார்டை கொடுத்து அவர்கள் போர்டில் எழுதும் வாக்கியத்தை மாணவர்கள் அனைவரும் எழுத வேண்டும் என்றும் இது பயிற்சிதான் என்பதாகவும் பொய்யான வகையில் மாணவர்களை கட்டாயப் படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் இதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.


Share this News:

Leave a Reply