நாகலாந்தில் அப்பாவி கிராம மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு – 13 பேர் பலி!

414

நாகலாந்து (05 டிச 2021): நாகலாந்து மாநிலம் மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோன் மாவட்டத்தில், ராணுவம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, ஒடிங் என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு மாலை வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர், தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றதை ஏற்படுத்தியுள்ளது.

நாகாலாந்து படுகொலை சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம் அச்சம்பவம் குறித்து உயர்மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.