நீதிபதி மரணத்தில் மர்மம் – சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!

815

ஜார்கண்ட் (29 ஜூலை 2021): ஜார்கண்ட் நீதிபதி டெம்போ வேன் மோதி கொல்லப்பட்டது தொடர்பாக பார்கவுன்சில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை காலை நடைபயிற்சி செய்தபோது அவர் மீது வேகமாக வந்த டெம்போ வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான , சி.சி.டி.வி காட்சிகள் குறித்த விசாரணையில் இந்த சம்பவம் விபத்து அல்ல, வேண்டுமென்றே நடந்திருக்கலாம், என்பதைக் குறிக்கிறது.

இதைப் படிச்சீங்களா?:  மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நீதிபதி இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் டெம்போ திருடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது, எஸ்சி பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் இந்த விவகாரம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தால் நாடு முழுவதும் உள்ள நீதித்துறையும் அதிர்ச்சி அடைந்துள்ளது.