காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்!

புதுடெல்லி (16 ஆக 2021): காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவி சுஷ்மிதா தேவ், அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் சுஷ்மிதா தேவ் மிக முக்கியமான தலைவர் ஆவார்.

முன்னதாக அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அந்த கடிதத்தில் பதவி விலக்கலுக்கான எந்தக் காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்தாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அசாம் தேர்தலில் காங்கிரஸ் வைத்த கூட்டணி தொடர்பாகவும், அசாம் மாநில காங்கிரஸின் வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும் பெரும் அதிருப்தி அடைந்தாகவும், அப்போதே கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அப்போது சோனியா காந்தி கேட்டுக்கொண்டதால் அவர் கட்சியில் நீடித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஹாட் நியூஸ்: