ஆந்திராவில் பயங்கரம் – சுருண்டு விழுந்த மக்கள்- 5000 த்திற்கும் அதிகமானோர் பாதிப்பு: வீடியோ

விசாகப்பட்டினம் (07 மே 2020): ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயும் கசிவால் 5000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் பிரபலமான எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலை, 1961ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கு பாலிமர் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்துஸ்தான் பாலிமர் நிறுவனமும், Mc Dowell & Company Limited ம் இணைந்து இந்த ஆலையை இயக்கி வருகிறது.

இந்த நிலையில் இங்கு இன்று அதிகாலை பெரும் வெடிப்பு சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3 மணிக்கு விபத்து ஏற்பட்டது. இதிலிருந்து வெளியான புகை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு பரவ தொடங்கியது. .

இதனல் இந்த தொழிற்சாலைக்கு அருகே இருக்கும் வீட்டில் இருந்த 13 பேர் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த நச்சுப்புகை தாக்கி சம்பவ இடத்திலேயே 13பேர் பலியானார்கள். இதில் ஒரு குழந்தை அடக்கம். அந்த இடத்தில் இருந்து அருகில் இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் இந்த விஷவாயு பரவியது. மக்கள் சாலையிலேயே விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். அதிகாலை வெளியே வந்த பலர் மயங்கி விழுந்தனர்.

இந்த புகை காரணமாக ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள்னர். அருகாமையில் உள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் சுவாசிக்க முடியாமல் மயங்கி விழுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விஷவாயு கசிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. தற்போது தீயணைப்பு படை வீரர்களும் தன்னார்வலர்களும் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர்.

இதைப் படிச்சீங்களா?:  மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!