மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு – டெண்டுல்கர் மீது விசாரணைக்கு சிவசேனா அரசு உத்தரவு!

362

மும்பை (08 பிப் 2021): மத்திய அரசுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும் ட்விட்டரில் பதிவிட்ட பிரபலங்களின் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த மகாரஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ்,நடிகை மியா கலிஃபா, உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச பிரபலங்களுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பாரத ரத்னா விருந்து பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கர், அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, சாய்னா நேவால் உள்ளிட்டவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர். அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தது.

மத்திய அரசுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரபலங்கள் கருத்து வெளியிட பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததா என்பதை அறிய டுவீட் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோர்க்கை வைத்தது.

இதனை அடுத்து அமைச்சர் அனில் தேஷ்முக் இதுகுறித்து விசாரணை நடத்த புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.