டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிர்ச்சி!

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம் பின்னணியில் சீன ஹேக்கர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் டெல்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கம் தொடர்வதால் அங்கு பல்வேறு சேவைகள் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரிலிருந்து நிறைய நோயாளிகளின் தரவுகளை எடுத்து அதனை டார்க் வெப் இணையத்திற்கு ஹேக்கர்கள் விற்பனை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஏராளமான அரசியல்வாதிகளின் மருத்துவ சிகிச்சை தரவுகளும் கசிந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. டெல்லி சைபர் க்ரைம், எய்ம்ஸ் நிர்வாகமும் இணைந்து சர்வரை மீண்டும் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயல்வதாகத் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

ஹிஜாப் தடை விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (23 ஜன 2023): ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து...

நுங்கு, குலோப் ஜாமுன் – சர்ச்சை மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை?

சென்னை (25 ஜன 2023): சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்கள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:...

கத்தாரில் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவசர உத்தரவு!

தோஹா (21 ஜன 2023): ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் 23 நாட்களுக்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக, ஹயா...