அரசியலை விட்டே விலகுவேன் – சித்து உறுதி!

Share this News:

புதுடெல்லி (03 ஜன ஞ2022): பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் சித்து கூறினார். பக்வாரா எம்எல்ஏ பல்விந்தர் சிங் தலிவால் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அவர் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய சித்து “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 5 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்காவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன்” என்று உறுதியளித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தனது 13வது திட்டம் ஏழைகளின் நலனுக்கானது என்று சித்து கூறினார். அப்போது பாஜகவை கடுமையாக சாடிய சித்து, போட்டி அரசியல் தலைவர்களை பாஜகவில் இணைய வேண்டும் அல்லது மத்திய அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்பதாக பாஜக மிரட்டி வருகிறது என்றார்.

மேலும் ஆம் ஆத்மி கட்சியையும், சிரோமணி அகாலி தளத்தையும் விமர்சித்தார். இந்த கட்சிகள் மக்களுக்கு ‘லாலிபாப்ஸ்’ கொடுக்கின்றன என்று கிண்டல் செய்தார் சித்து. டெல்லியில் 22,000 ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து இருந்தும் முதல்வர் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாபில், காங்கிரசுக்குள் உள்கட்சி பூசல் நீடிக்கிறது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற சித்துவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை நிராகரித்தது. பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு பொறுப்பேற்றுள்ள சுனில் ஜா, தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்காது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply