ராஜினாமா செய்கிறாரா சோனியா காந்தி? – இன்று பரபரப்பு விவாதம்!

புதுடெல்லி (13 மார்ச் 2022): ஐந்து மாநில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தேர்தலில் பெற்ற தோல்விக்கான காரணங்கள் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்நிலையில், அவரால் தீவிரமான தேர்தல் பணிகளை செய்ய முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். இதனால்தான் கேப்டன் இல்லாத கப்பல்போல காங்கிரஸ் கட்சி தடுமாறும் நிலை உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி நிலவி வரும் நிலையில், தோல்வி அடைந்த அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் படுதோல்விக்கு மற்றுமொரு காரணமாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. இதில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் நடப்பு அரசியல் சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

ஹாட் நியூஸ்:

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...

முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு...

ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு அதிகரிப்பு!

புதுடெல்லி (01 பிப் 2023): 2023-2024 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிய வரி முறையில் வருடத்திற்கு ரூ....