காங்கிரஸ் தலைவர் யார்? – சோனியா காந்தி பின்வாங்கல்!

Share this News:

புதுடெல்லி (24 ஆக 2020): காங்கிரஸ் இடைக்கால தலைவராக தொடர விருப்பமில்லை என்று தற்போதைய தலைவர் சோனியா காநதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கியது.

சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை சோனியா காந்தி தொடர வேண்டும் என காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

கூட்டத்தில்பேசிய சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள்; இடைக்கால தலைவராக தொடர விருப்பம் இல்லைஎன பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை, வேலையில்லா திண்டாட்டம், கொரோனா காலத்தில் நடைபெறும் தேர்தல்களுக்காக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply