ஆப்கானிஸ்தானில் மேலும் பல இந்தியர்கள் சிக்கித் தவிப்பு!

Share this News:

புதுடெல்லி (20 ஆக 2021): ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை இந்தியா கொண்டு வர சார்ட்டர்ட் விமானங்களை அனுப்ப இந்தியா அமெரிக்காவிடம் அனுமதி கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைபற்றிய நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு சிக்கிய இந்தியர்கள் பலர் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இதற்கிடையே அங்கு மேலும் சிக்கியிருக்கும் 400 க்கும் அதிகமான இந்தியர்களை இந்தியா கொண்டு வர சார்ட்டர் விமானங்களை அனுப்ப இந்தியா அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. . இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பேசியுள்ளார்.

காபூல் விமான நிலையத்திற்கு சார்ட்டர்ட் விமானங்களை அனுப்ப எந்த தடையும் இல்லை என்று அமெரிக்கா இந்தியாவுக்கு அறிவித்ததாக கூறப்படுகிறது. எனவே சார்ட்டர்ட் விமானங்களை அனுப்புவது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது..

நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியர்களை திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.

மேலும் நாடு திரும்பும் குடிமக்களுக்கு, விசா நடைமுறைகள் உள்ளிட்டவற்றை எளிதாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


Share this News:

Leave a Reply