பள்ளி மாணவியின் ஹிஜாபை கழற்ற சொன்னதால் பரபரப்பு – VIDEO

Share this News:

மாண்டியா (14 பிப் 2022): மாண்டியாவில் உள்ள ரோட்டரி எஜுகேஷனல் சொசைட்டி பள்ளி மாணவர்கள், பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாபை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கர்நாடகாவில் பள்ளிகள் பிப்ரவரி 10 அன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி, கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யும் அரசின் உத்தரவை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் ட்விட்டரில் வெளியான வீடியோ ஒன்றில் ஹிஜாப் அணிந்த இளம் மாணவிகள் பள்ளி நிர்வாக உத்தரவின்படி தயக்கத்துடன் தலையில் உள்ள முக்காடுகளை கழற்றுவதைக் காண முடிகிறது. மேலும் அந்த வீடியோவில் ஹிஜாபுடன் வரும் மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர் அவர்களை பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுக்கிறார்.

 

பள்ளிகள் அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதால், பெற்றோர்கள் நிர்வாகத்திடம் பேச முயற்சிப்பதைக் காண முடிகிறது.

இதற்கிடையே ஹிஜாப் விவகாரம் கர்நாடக நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


Share this News:

Leave a Reply