குறுகிய காலத்தில் 6,000 கிமீ தூரம் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த சுஃபியா கான்!

Share this News:

புதுடெல்லி (30 மார்ச் 2022): 6,002 கிமீ தூரத்தை 110 நாட்கள், 23 மணி நேரம், 24 நிமிடங்களில் ‘தங்க நாற்கரத்தில்’ கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த சுஃபியா கான்.

தங்க நாற்கரம் என்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் தொடராகும்.

தடகள வீராங்கனையான சுஃபியா கான், டிசம்பர் 16, 2020 அன்று தேசியத் தலைநகரில் இருந்து தனது ஓட்டத்தைத் தொடங்கி, ஏப்ரல் 6, 2021க்குள் தங்க நாற்கர சுற்றுப் பயணத்தை முடித்தார். சனிக்கிழமையன்று “இந்திய கோல்டன் நாற்கர சாலையில் வேகமாக ஓடிய பெண்” என்ற சான்றிதழைப் பெற்றார்.

இந்த சாதனை குறித்து அவர் தெரிவிக்கையில், “ஓட்டத்தின் போது பல காயங்கள் ஏற்பட்டாலும், எனது முழு கவனம் இந்த முயற்சியை குறைந்தபட்ச நேரத்தில் முடிப்பதில் இருந்தது” என்றார்.

“நான் ஓடிய ஏறக்குறைய எல்லா நகரங்களிலும், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் சேர்ந்து எங்களுக்கு ஆதரவளித்தனர். பெரும்பாலான நேரங்களில் வழியில் பல நகரங்களில் உள்ளவர்கள் இரவு தங்குவதற்கு இடமும் உணவும் தந்து உதவினர். பல முறை நாங்கள் ஹோட்டல்களை எடுத்தோம். ஓரிரு இரவுகள் சாலையோர தங்குமிடங்களில் தூங்க வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.

சுஃபியாவின் கணவர் அவர் ஓட்டத்தில் ஆதரவளித்தார். மேலும் அவரது ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரபியை கவனித்து, அவரது அட்டவணையை நிர்வகித்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வேகமாக ஓடிய பெண் என்ற கின்னஸ் சாதனையை சுஃபியா ஏற்கனவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply