BREAKING NEWS: குடியுரிமை சட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்க்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 143 மனுக்கள் மீது இன்று விசாரணை செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போட்கே தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வுக்குக் கீழ் மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

இன்று வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமைச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது.

விசாரணையின் போது காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல், “மத்திய அரசு சட்டத்தை அமல் செய்வதை 2 மாதங்கள் தள்ளிப் போடலாம். நாங்கள் தடை கோரவில்லை,” என்றார். அவர், தேசிய குடிமக்கள் பதிவேடான என்பிஆர் நடவடிக்கைகளையும் ஒத்தி வைக்குமாறு வலியுறுத்தினார்.

பெரும்பான்மையான மனுக்கள் இந்தச் சட்டமானது, சட்ட சாசனத்துக்குப் புறம்பானது என்று கூறுகின்றன. அதேபோல மத அடிப்படையில் இந்தச் சட்டம் மூலம் குடியுரிமை வழங்கப்படும் என்பதால், அனைவரும் சமம் என்கிற உரிமையையும் இந்தச் சட்டம் மீறுவதாக மனுக்கள் தெரிவித்தன. தாக்கல் செய்யப்பட்டுள்ள பல மனுக்கள், ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்திருக்கும் சிஏஏ-வுக்குத் தற்காலிகத் தடை விதிக்கச் சொல்லியும் வலியுறுத்தின.

எனினும் அரசின் முடிவை கேட்காமல் தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, தொடர்ந்து வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள், சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள அரசியல் கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply