இந்தியாவில் மூன்றாவது அலை பிப்ரவரியில் உச்சத்தை தொடும் – விஞ்ஞானிகள் கருத்து!

410

கான்பூர் (07 டிச 2021): இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் என்று ஐஐடி விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி மனிந்திர அகர்வால் தெரிவிக்கையில், இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில், தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கொரோனா வழக்குகள் பதிவாகலாம். ஆனால் மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட குறைவாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் ஓமிக்ரான், டெல்டாவை விட அதிக சக்தி வாய்ந்தது, ஆனால் குறைவான தீவிரம் கொண்டது என்று அகர்வால் தெரிவித்தார்.

இதைப் படிச்சீங்களா?:  நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவேன் - பில்கீஸ் பானு திட்டவட்டம்!

இரண்டாவது கொடிய அலை கடந்த மே மாதம் உச்சத்தை எட்டியது. அப்போது, ​​ஒரு நாளைக்கு நான்கு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகின.

இந்தியாவில் இதுவரை சுமார் 23 ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பத்து, ராஜஸ்தானில் ஒன்பது, டெல்லி மற்றும் குஜராத்தில் தலா ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.