திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைவதற்கு மத்திய அமைச்சர் எதிர்ப்பு

449

கொல்கத்தா (19 டிச 2020): மேற்கு வங்கத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தனது அரசியல் சூழ்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜகவில் இணைவதற்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுவேண்டு ஆதிகாரி பாஜகவில் இணைகிறார். திரிணாமுல் மூத்த தலைவர் சுவேந்து ஆதிகாரியைத் தவிர, மேலும் இரண்டு திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் ஜிதேந்திர திவாரி மற்றும் ஷில்பத்ரா தத்தா ஆகியோர் இன்று பாஜகவில் இணைவார்கள் என தெரிகிறது.

இதைப் படிச்சீங்களா?:  சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

இரண்டு நாள் பயணத்திற்காக வங்காளத்தில் இருக்கும் அமித் ஷா இன்று மிட்னாபூரில் பேசவுள்ளார். இதில் பலர் பாஜகவில் இணைவார்கள் என தெரிகிறது.

இதற்கிடையே ஜிதேந்திர திவாரியை பாஜகவில் இணைப்பதற்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக தேசியத் தலைவரிடம் பேசுவேன் என தெரிவித்தார்..

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது மம்தா பானர்ஜிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது..