தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை என்ன?

Share this News:

புதுடெல்லி (21 ஆக 2022): தக்காளிக் காய்ச்சல் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

தக்காளி காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படும் முதன்மை அறிகுறிகள் சிக்குன்குனியாவைப் போலவே இருக்கும், இதில் அதிக காய்ச்சல், உடல் தடிப்பு மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி ஆகியவை அடங்கும்.

மேலும் கோவிட்-19 நோயாளிகள் அனுபவிக்கும் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மூட்டு வீக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர்ப்போக்கு, ஆகியவை மற்ற அறிகுறிகளாகும்.

தக்காளி காய்ச்சலுக்கான சிகிச்சையானது சிக்குன்குனியா, டெங்கு ,கொரோனா நோய்களுக்கான சிகிச்சையைப் போன்றது.

நோயாளிகள் தனிமைப்படுத்தவும், ஓய்வெடுக்கவும், ஏராளமான திரவங்களை உட்கொள்ளவும், மற்றும் பாரஸிடமால் மருந்து எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Share this News:

Leave a Reply