மேற்கு வங்க அரசியலில் தன் சித்து வேலையை தொடங்கிய பாஜக – திரிணாமுல் காங்கிரஸில் விரிசல்!

341

கொல்கத்தா (17 டிச 2020): திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுவேந்து ஆதிகாரி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பின்னர் சுவேந்து ஆதிகாரி தனது சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாம் செய்துள்ளார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுவேந்து ஆதிகாரி மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், புருலியா, பாங்குரா மற்றும் மேற்கு மிட்னாபூர் ஆகிய பகுதிகளின் பொறுப்பாளராகவும் , மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார். எனவே, அதிகாரியின் ராஜினாமாவைத் தவிர்க்க திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக முயன்றது. எனினும் அவர் பதவி விலகியுள்ளது திரிணாமுல் காங்கிரஸுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என தெரிகிறது.

இதைப் படிச்சீங்களா?:  பசியை போக்க நாணயங்களை சாப்பிட்ட முதியவர்!

மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கட்சியில் நுழைந்ததும் அவரது வளர்ச்சியும் மம்தாவின் விசுவாசிகளுக்கு கட்சியில் சரியான மரியாதை இல்லை என்பதாக கூறப்படுகிறது. இது கட்சிக்குள் ஏற்கனவே புகைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தி பிளவு படுத்த பாஜக முயன்று வருவதும் கவனிக்கத்தகக்து.