முஹம்மது ஜுபைர் கைதுக்கு ஐ.நா செய்தித் தொடர்பாளர் கண்டனம்!

375

வாஷிங்டன் (29 ஜூன் 2022): இந்தியாவில் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு கைது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐநா செய்தித் தொடர்பாளர், ஊடகவியலாளர்கள் எழுதுவதற்கும், ட்வீட் செய்வதற்கும், பேசுவதற்கும் இவ்வாறு சிறையில் அடைக்கப் படுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

UN Chief's Spokesperson Stephane Dujarric
UN Chief’s Spokesperson Stephane Dujarric

உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Alt News இணை நிறுவனர் ஜுபைர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட ட்வீட் ஒன்றின் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறையால் திங்கள்கிழமை (27-06-2022) கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஒருநாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

இதைப் படிச்சீங்களா?:  பிஹாரில் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சி?

பத்திரிக்கையாளர் ஜுபைர் கைது குறித்து பதிலளித்துப் பேசிய பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:

“உலகில் எந்த இடத்திலும் மக்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க அனுமதிப்பது மிகவும் அவசியம், ஊடகவியலாளர்கள் எந்த அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாக கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார்.

சமீபத்தில் முஹம்மது நபி குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா-வின் உரையை உலகறியச் செய்தவர் முஹம்மது ஜுபைர் என்பது குறிப்பிடத் தக்கது.