பிப்ரவரி 1 ஆம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட்!

133

புதுடெல்லி (22 நவ 2021): பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தேதியை மாற்ற வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இம்முறை அதிக கால அவகாசம் வழங்கப்படும். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை, கூடுதல் நேரம் கிடைக்க நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கோவிட் சூழ்நிலையில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு செலவு செய்வதில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பட்ஜெட் தேதியை ஒத்திவைத்து, செலவுக்கு அதிக அவகாசம் வழங்குவது முதல் முடிவு. ஆனால் இதற்கு நிதி அமைச்சகம் தயாராக இல்லை.

இதைப் படிச்சீங்களா?:  மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பள்ளி மீது பஜ்ரங் தள் அமைப்பினர் வெறிச்செயல்!

பிப்ரவரி மாதம் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட். இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான பூர்வாங்க பணிகள் அக்டோபர் 12ம் தேதி தொடங்கிவிட்டது.

கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் வரும் பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு நம்பிக்கை இருக்கும். வேலை வாய்ப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.