தடுப்பூசி குறித்து வாய் திறக்கக்கூடாது – மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!

265

புதுடெல்லி (10 ஜூன் 2021): தடுப்பூசி இருப்பு குறித்த விவரங்களை மாநிலங்கள் பகிரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய சுகாதார மிஷனின் மாநிலத் திட்ட இயக்குநர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தடுப்பூசி இருப்பு மற்றும் தடுப்பூசிகள் சேமித்துவைக்கப்பட்டுள்ள வெப்ப நிலை குறித்து மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (eVIN) உருவாக்கும் தரவுகளும் மற்றும் பகுப்பாய்வும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது. அவற்றை வேறு எந்த நிறுவனங்களுடனோ, ஊடகத்துடனோ, பொதுமக்கள் மன்றங்களிலோ அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் நிலையில் மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.