தொடரும் போராட்டம் – விவசாய சட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு!

Share this News:

புதுடெல்லி (15 டிச 2020): நியாயமற்ற வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்திவரும் வேலைநிறுத்தம், இருபதாம் நாளிலும் தொடர்கிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தில், எதிர்கால வேலைநிறுத்த திட்டங்கள் குறித்து விவசாயிகள் அமைப்புகள் முடிவு செய்யும்.

இதற்கிடையில், மூன்று புதிய சட்டங்களின் பெயர்களை மாற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

“சட்டத்தை முழுமையாக ரத்து செய்யாமல் வேலைநிறுத்தம் நிறுத்தப்படாது!” என்று விவசாயிகள் அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதற்கிடையில் சட்டத்தின் பெயரை மாற்ற, அரசு விவாதித்து வருகிறது. அரசாங்கம் முன்வைத்த திருத்தங்களைச் சேர்த்து, சட்டத்திற்கு புதிய முகம் கொடுப்பதே இதன் நோக்கம். ஆனால் இது தொடர்பாக விவசாயிகள் எந்த நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது இப்படியிருக்க, விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக பாஜக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

பாஜக வகுத்த இந்த சட்டம் விவசாயிகளின் நலனுக்கானது என்பதை விளக்கும் வகையில் இந்தப் பிரச்சாரம் அமைந்துள்ளது.


Share this News:

Leave a Reply