விவசாயிகள் போராட்டத்தால் திணறும் மத்திய அரசு!

புதுடெல்லி (28 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்வதால் மத்திய அரசு செய்வதறியாது திணறி வருகிறது.

நேற்று முன் தினம் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் மூன்றாம் நாளாக தீவிரமாக தொடர்ந்து வருகிறது. அரசு தீர்மானிக்கும் இடத்தில் போராடுவதால் எந்த பயனும் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலையிலேயே வேலைநிறுத்தம் தொடரும் என்றும் விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். இதனால் சிங்கூரில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க அதிகமான விவசாயிகள் டெல்லியை நோக்கி விரைந்துள்ளனர். அதே நேரத்தில், காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையை மூடிவிட்டு அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஒரு பிரிவு இங்கே போராட்டம் தொடரும் என்றும் மோடி அரசு இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

மறுபுறம், டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகளின் வேலைநிறுத்தத்தைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லைச் சாலைகள் மூடப்பட்டு ஒரு பெரிய படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை புராடியில் ஒரு பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

ஹாட் நியூஸ்:

துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்!

துபாய் (22 ஜன 2023): துபாயில் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் அல் பராக மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது.. IWF பேரவையின்...

பசு கடத்தல் வழக்கில் 22 வயது இளைஞர் முஹம்மது அமீனுக்கு ஆயுள் தண்டனை!

புதுடெல்லி (21 ஜன 2023): பசுக்களை கடத்திய வழக்கில் 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் விசித்திர தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானைச் சேர்ந்த முகமது அமீன் என்பவர் கடந்த...

புகழ்பெற்ற துபாய் மாலின் பெயர் மாற்றம்!

துபாய் (24 ஜன 2023): துபாயின் சின்னம் என்று பலராலும் சிலாகித்து வர்ணிக்கக்கூடிய "தி துபாய் மால்" அதன் பெயரை மாற்றுகிறது. உலகின் மிக உயரமாக கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஷாப்பிங்...