ஹஜ் யாத்திரை குறித்து ஒன்றிய அமைச்சர் விளக்கம்!

Share this News:

புதுடெல்லி (06 ஜூன் 2021): இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய சிறுபான்மை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியா கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களை தடை செய்தது. இந்த ஆண்டும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய வகை கொரோனா குறித்து கவலைகள் எழுப்பப்படுவதாலும் இந்த முறை ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

எனினும் சவூதி அரசின் முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

மேலும் சவூதி அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கூறியதாக அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply