தீண்டாமை நோயில் பற்றி எரியும் மற்றொரு தீண்டாமை – பதற வைக்கும் தகவல்!

Share this News:

குஷிநகர் (12 ஏப் 2020): கொரோனா அறிகுறிகளுடன் தனிமை படுத்தப்பட்டுள்ள இருவர் பட்டியல் இனப் பெண் தயாரித்த உணவை உண்ண மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் குஷிநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 5 நபர்களை அங்குள்ள ஆரம்ப பள்ளியில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடுத்தர வயது மதிக்கத்த இருவர் மட்டும் அங்கு உணவு சமைத்து கொடுக்கும் பெண்ணிடம் உணவு உண்ண மறுத்து இருவரும் அவர்களது வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அந்த பெண் பட்டியல் இனப் பெண் என்பதால் அந்த இருவரும் அந்த பெண் சமைக்கும் உணவை உண்ண மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உணவு சமைத்து கொடுக்கும் லீலாவதி என்ற பெண் கூறுகையில், “இங்கு ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுக்கு பயந்து வாழந்து வருகின்றனர். உயரதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு உணவுகளை சமைத்து கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டேன். உணவுகளை சமைக்கும்போது கைகளில் கவசமும் முகக்கவசமும் அணிந்துதான் சமைக்கிறேன்.

காலை மற்றும் மாலையில் அங்கு கொண்டு போய் உணவுகளை வைத்துவிட்டு திரும்பிவிடுவேன். நீ செய்த உணவுகளை எங்களால் சாப்பிடமுடியாது என இருவரும் கூறிவிட்டனர். இதில் எனக்கு எந்தப்பிரச்னையும் இல்லை. இதுகுறித்து நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டேன்” என்றார்

கொரோனா சாதி பார்த்தா வருகிறது. இதில் என்ன சாதி பார்ப்பது? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.


Share this News:

Leave a Reply