முஹர்ரம் பண்டிகை ஊர்வலங்களுக்குத் தடை!

243

லக்னோ (15 ஆக 2021): உத்தரபிரதேச அரசு முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தடை விதித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் பரவல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தடை விக்கப்பட்டுள்ளது. அதேவேளை வீடுகளில் நடத்தப்படும் ‘தஜியா’ மற்றும் ‘மஜாலிஸ்’ ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 666 பேர் பலி!

யோகி ஆதித்யநாத் நிர்வாகம் சனிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது, மொஹர்ரம் சமயத்தில் எந்த மத ஊர்வலங்களையும் எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட அதிகாரிகளை யோகி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.