மதரஸாக்களுக்கான வருமானம் குறித்து விசாரணை நடத்த அரசு முடிவு!

Share this News:

லக்னோ (22 நவ 2022): உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் வருமான ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக உ.பி அரசு நடத்திய சர்வேயில் பெரும்பாலான மதரஸாக்கள் ஜகாத்தை வருமானமாக அறிவித்துள்ளன. இந்த விசாரணையின்படி1500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் எங்கிருந்து இந்த ஜகாத் (நன்கொடை) பெறுகின்றன என்பது இப்போது கண்டறியப்படும்.

குறிப்பாக நேபாள எல்லையில் அமைந்துள்ள உ.பி., மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில், வருமான ஆதாரம் குறித்த விசாரணை அறிக்கை ஆய்வு செய்யப்படும்.


Share this News:

Leave a Reply