தவறாக பயன்படுத்தப்படும் சட்டம் – இயற்றப்பட்ட ஒரே மாதத்தில் 35 முஸ்லீம் இளைஞர்கள் கைது!

Share this News:

லக்னோ (28 டிச 2020): உத்தரபிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் (லவ் ஜிஹாத்) தடைச் சட்டம் இயற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு. இந்த மாதத்தில் 35 முஸ்லீம் இளைஞர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஊடக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

நவம்பர் 27 முதல் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் சுமார் ஒரு டஜன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாள் முதலே மாநிலத்தில் கைதுகள் தொடங்கிவிட்டன.

பெண் ஒருவரின் தந்தை தனது மக்களை மதம் மாற்ற கட்டாய படுத்துவதாக அளித்த புகாரை அடுத்து பரேலியைச் சேர்ந்த உவைஷ் அகமது (21) கைது செய்யப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

அதேபோல , முசாபர்நகரில் நதீம், என்பவர் மீதும் லவ்ஜிஹத் வழக்கு பாய்ந்தது. மொராதாபாத்தில் சகோதரர்கள் ரஷீத் மற்றும் சலீம், மோய் நகரில் சதாப் கான், சீதாபூரில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள், பிஜ்னோரில் அப்சல், ஹார்டோவில் முகமது ஆசாத் ஆகியோர் கட்டாய மதம் மாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.மொராதாபாத்தைச் சேர்ந்த சலீம் அலி மற்றும் ரஷீத் அலி இருவரும் இந்த மாத தொடக்கத்தில் லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர், ஆனால் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல பிஜ்னோரி நேற்று தலித் சிறுமியுடன் நடந்து சென்ற ஒரு முஸ்லிம் இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார் . இருவரும் வகுப்பு தோழர்கள். நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு போய்விட்டு வீடு திரும்பும் வழியில் இருவரும் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு போலீசார் கையில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

இதற்கிடையே யோகி ஆதித்யநாத் நிறைவேற்றிய புதிய லவ்ஜிஹாத் சட்டத்திற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply