CAA எதிர்ப்பு போராட்டத்தில் மீண்டும் வன்முறை, பதற்றம் – போலீஸ் கண்ணீர் புகை வீச்சு!

Share this News:

புதுடெல்லி (23 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரசும் கடுகளவும் இவ்விவகாரத்தில் பின் வாங்காமல் பிடிவாதமாகவே உள்ளது.

இதனால் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக் மாடல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் ஷஹீன் பாக் போலவே 1000 த்திக்ற்கும் அதிகமான பெண்கள் டெல்லி மஜூபூர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜகவின் சர்ச்சை தலைவர், கபில் மிஸ்ரா தலைமையில் சிஏஏ ஆதரவு பேரணி இன்று நடைபெற்றது. அப்போது அவர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் பகுதியில் வந்தபோது, வன்முறை வெடித்தது. இதனை அடுத்து மாஜ்பூர் பகுதி பெரும் கலவர பூமியாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். மோதல் காரணமாக மாஜ்பூர்-பாபர்பூர் இடையே மெட்ரோ ரயில் நிலையத்தின் கதவுகள் மூடப்பட்டன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வரவுள்ள நிலையில் டெல்லியில் வன்முறை வெடித்துள்ளது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சிஏஏ போராட்டத்தின் போது, டெல்லி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply