ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் நடத்தியது அந்த காலம் – ஒரே பொய்யில் கல்யாணம் நின்றது இந்த காலம்!

736

லக்னோ (24 ஜூன் 2021): கல்யாண மாப்பிள்ளைக்கு உள்ள குறையை மறைத்ததால் சந்தேகித்த புதுமணப்பெண் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்திர பிரதேசம் ஆரய்யா மாவட்டம் சதார் கோட்வாலி அருகே உள்ளது ஜமாலிபுர் என்ற கிராமதத்தில் வசித்து வருபவர் அர்ஜூன் சிங்… இவரது மகள் பெயர் அர்ச்சனா.. இவருக்கு அச்சால்டா பகுதியைச் சேர்ந்த சிவம் என்ற மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு பேசி முடித்தனர்.. நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 20ம் தேதி தான் இவர்களுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.. மணநாளும் வந்தது.

அப்போது மணமேடையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை கண்ணாடியை கழட்டாமல் இருந்துள்ள்ளார். இது புதுமணப்பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் ஏன் கண்ணாடி போட்டிருக்கிறார் என்று அங்கேயே சிலரிடம் மணப்பெண் விசாரித்துள்ளனர்.. மாப்பிள்ளைக்கு கண்ணாடி போடாவிட்டால் பார்வை தெரியாது என்று சொல்லி இருக்கிறார்கள்.. இதைக் கேட்டதும் மணப்பெண் அதிர்ந்து போயுள்ளார்.. உடனே ஒரு நியூஸ்பேப்பரை எடுத்து வந்து மாப்பிள்ளையிடம் நீட்டினார்.. அந்த நியூஸ்பேப்பர் ஹிந்தியில் இருந்தது.. டக்கென பேப்பரை நீட்டி படிக்க சொல்லவும், மாப்பிள்ளை ஷாக் ஆகிவிட்டார்.

ஆனால் அவரால் நிஜமாகவே கண்ணாடி இல்லாமல் படிக்க முடியவில்லை. இதனால் மணப்பெண், இந்த கல்யாணமே வேண்டாம், உடனே நிறுத்துங்க என்று மணமேடையில் சத்தம் போட்டார்.. முதன்முதலில் பெண் பார்க்க வந்தபோது, ஏதோ பேஷனுக்காக மாப்பிள்ளை கண்ணாடி போட்டிருக்கிறார் என்று நினைத்தாராம்.. ஆனால், பார்வை குறைபாடு இருப்பது தெரியாதாம்.. படித்தவர் என்று பொய் சொல்லி, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்ததாக கூறி மணமகன் வீட்டார் மீது மணப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.