முஸ்லிமாக மாறிய பெண் படுகொலை!

பெங்களூரு (05 அக் 2022): கர்நாடகாவில் முஸ்லிமாக மாறிய இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் நாகாவி தாண்டா பகுதியைச் சேர்ந்த மீனாஸ் பெஃபாரி (35) என்பவர் சமீபத்தில் முஸ்லிமாக மாறினார். இந்நிலையில் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் இந்துத்வாவினர் சேதனா ஹுலகண்ணவர, ஸ்ரீனிவாச ஷிண்டே மற்றும் குமார் மரனாபசாரி ஆகியோர் அவரை கொலை செய்துள்ளனர்.

கடக் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த மீனாஸ் பேக்கரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அவர் வெட்டிக் கொல்ல்லப்பட்டர்..

கொலையை செய்த குற்றவாளிகள் நேரடியாக போலீசில் சென்று சரணடைந்தார். இது குறித்து கடக்ஷாஹர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முஸ்லீம் மதத்திற்கு மாறியதற்காக அவர் கொல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹாட் நியூஸ்: