கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை!

Share this News:

பாட்னா (09 ஏப் 2020): கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் கயா மாவட்டத்தில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவர் பஞ்சாபிலிருந்து திரும்பியிருந்தார். அவர் பஞ்சாபின் லூதியானாவில் இரண்டு மாத கர்ப்பினியாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென குழந்தை கலைந்து விட்டது. உடனே மருத்துவர்களின் பரிந்துரைப்படி பஞ்சாபில் D and C செய்யப்பட்டது.

அதன் பின்பு பீகாருக்கு திரும்பியிருந்தார். ஆனால் அவருக்கு இரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால், அந்த பெண்ணின் கணவர் கயா தனியார் மருத்துவமனையான ‘அனுராக் நரேன் மகாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்’ சிகிச்சைக்காக அனுமதித்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறி தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததும், இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வந்தபோது, மீண்டும் ரத்த போக்கு இருந்தது. கதறி அழுத அந்த பெண், மருத்துவர்கள் சிலர் தன்னை வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார். மேலும் அடுத்த தினமே அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனை அப்பெண்ணின் மாமியார் போலீசில் புகாராக அளித்துள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும், மாமியார் அடையாளம் காட்டியுள்ளார். ஆனால் வன்புணர்வு செய்தது, அந்த மருத்துவரல்ல என கூறப்படுகிறது. மேலும் விசாரணை மேற்கொண்ட மருத்துவர்கள் இருவரை கைது செய்துள்ளனர். இவ்விவகாரம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply