நடிகை கங்கனா ரானாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற வேண்டி குடியரசுத் தலைவருக்குக் கடிதம்!

Share this News:

புதுடெல்லி (15 நவ 2021): கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் தலைவி ஸ்வாதி மாலிவால் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

1947ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை. அது இந்தியாவுக்குக் கிடைத்த பிச்சை உண்மையில் 2014 இல்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது, ”என்று கங்கனா ரணாவத் டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பேசினார். இதையடுத்து கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக்கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கலாசார ஆர்வலர்களும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் தலைவி ஸ்வாதி மாலிவால் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவின் சுதந்திரத்தை பிச்சை என்று கூறிய கங்கனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும். என்று கூறியுள்ளார்.

மேலும் கங்கனாவின் மனநிலை தவறானது என்றும் இது ஒரு தனிமையான சம்பவம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அக்கடிதத்தில் கங்கனா, தன் எதிர்ப்பாளர்களை கெட்ட வார்த்தைகளால் தாக்குவதாகவும், சொந்த நாட்டு மக்கள் மீது அவர் விஷத்தை கக்குகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி, பகத் சிங் மற்றும் நம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது கங்கனா ரணாவத்தின் வெறுப்பு அந்த அறிக்கையில் பிரதிபலித்தது என்று ஸ்வாதி மாலிவால் மேலும் கூறினார். கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளை அவரது கருத்து புண்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply