தவறான முடிமாற்று அறுவை சிகிச்சையால் இளைஞர் மரணம்!

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லியில் உள்ள கிளினிக் ஒன்றில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது அதர் ரஷீத் என்பவர் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷீதுக்கு முடி மாற்று சிகிச்சை மேற்கொண்டபோது பல உறுப்புகள் செயலிழந்ததால் இறந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ரஷீத்தின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, அறுவை சிகிச்சை செய்த இருவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ரஷீத்தின் தாய் ஆசியா பேகம் கூறுகையில், முடி மாற்று அறுவை சிகிச்சையால் தனது மகன் வலியால் மிகவும் அவதிப்பட்டார் . ரஷீத்தின் உடல் முழுவதும் சொறியாக காணப்பட்டது. என்றார்.

இதனால் அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவ ஊழியர்களுக்கு எதிராக காவல்துறையை அணுக முடிவு செய்தனர்.

முடி மாற்று அறுவை சிகிச்சையில் சில தவறுகளும் உள்ளன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே காவல்துறையில் புகார் அளித்ததாக ஆசியா பேகம் கூறினார்.

தன்னைப் போல் வேறு எந்த தாயும் தன் மகனை இழக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். முடி மாற்று அறுவை சிகிச்சை ஒரு மோசடி நடைமுறை என்றும் ஆசியா பேகம் கூறினார்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு...

13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை!

கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம்...

ஊழியர்களை சவூதிமயமாக்கலில் நிதாகத் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சவுதிமயமாக்கலை கட்டாயமாக்கும் திருத்தப்பட்ட நிதாகத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும். சவூதி...