மத்திய அரசின் நிபுணர் குழு உறுப்பினராக லூலூ குழும உரிமையாளர் யூசுப் அலி நியமனம்!

Share this News:

புதுடெல்லி 18 ஜன 2021): வெளிநாட்டவர் குடியேற்றம் தொடர்பான கொள்கை பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் உறுப்பினராக லூலூ நிறுவன உரிமையாளர் யூசுப் அலி நியமிக்கப் பட்டுள்ளார்.

யூசுப் அலி வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் லூலூ குழுமம் மூலம் பல ஹைப்பர் மார்கெட்டுகளை நியமித்து இந்தியாவின் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களின் ஒருவராக விளங்குகிறார். இவர் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஐ.சி.எம் (இந்தியா இடம்பெயர்வு மையம்) ன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தொடர்பான கொள்கை விஷயங்களில் வெளியுறவு அமைச்சகத்திற்கு உதவும் ஒரு குழு ஆகும். வேலைவாய்ப்புத் துறையில் நாட்டின் மனித வளங்களை சர்வதேச தரத்திற்கு சித்தப்படுத்துதல், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல், ஆகியவை ஐ.சி.எம் (இந்தியா இடம்பெயர்வு மையம்) ன் முக்கிய பணியாகும்.

இந்தியாவை நன்கு தகுதிவாய்ந்த மற்றும் திறமையான தொழிலாளர்கள் கொண்ட நாடாக முன்னிலைப்படுத்துதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான நலத்திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் ஐ.சி.எம். முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த குழுவில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமை தாங்குகிறார், இதில் நிதி அமைச்சக, செயலாளர், தொழிலாளர் அமைச்சகம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் முக்கிய அங்கம் வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply