இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: உதவுங்கள் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ரேசன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக கோருதல், பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரை சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம்.

இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக, கிராம/டவுன் பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேன்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, ஏரியா காவல்துறை மூலம் பிறப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கீழ்கண்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்கள், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள்:


1. சென்னை : குடும்பநல வாரியம்(Health and Family Welfare Department) - படிவம்

2. கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

3. ஈரோடு: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

4. சேலம்: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

5. தூத்துக்குடி: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

6. மதுரை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

7. திருநெல்வேலி: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

Comments  

 
-1 # farook 2011-12-07 09:50
1985il berantavargalin nilami enna aagum
பதில் | Reply with quote | Quote
 
 
0 # vasu 2011-12-29 19:36
paddikka therindhvargalukku ithai purindhukolvadhu saathiyam aanal padippariuv illadhavargalukku pamara makkalukku indha vishiyathai therivippadhu
பதில் | Reply with quote | Quote
 
 
0 # vasu 2011-12-29 19:38
[quote name="vasu"]paddikka therindhvargalukku ithai purindhukolvadhu saathiyam aanal padippariuv illadhavargalukkum
pamara makkalukku indha vishiyathai eppadi therivippadhu
பதில் | Reply with quote | Quote
 
 
0 # kandasamiponnusami 2011-12-30 16:27
very good & useful information
பதில் | Reply with quote | Quote
 
 
0 # mohamed sadik 2012-05-16 21:13
குறிப்பா இந்த விசயத்தில் நம்மவர்கள் முதலில் பெயர்களை பதியும்போது எழுத்து பிழைகள் இல்லாமல் எழுதி கொடுத்து சரி பார்த்து பதியனும். பிரசவத்துக்கு மருத்துவ மனையில் சேர்க்கும் போது தாய் தந்தையின் பெயரை கேட்பார்கள் ( தந்தை வெளிநாட்டில் இருப்பார்) இவர்களும் வாய்வழியாக சொல்வார்கள் அவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை எழுதி வைப்பார்கள் பின்பு குழந்தை பிறந்ததும் அப்படியே செய்வார்கள். அந்த குறிப்பை மருத்துவமனை நகராட்சிக்கு அனுப்பும் அதன்படியே பிறப்பு சான்றிதழ் பதிவாகிவிடும். இதுல பிரச்சனை என்னவென்றால் முஸ்லிம்கள் பெயர்களை பெரும்பாலான மாற்றுமத பணியாளகளுக்கு சரியாக எழுத தெரியாது பதிவில் தவறாக இருக்கும். ஒருவருக்கு மூன்று பிள்ளைகள் என்றால் ஒவ்வொரு பிள்ளைக்கும் பதிவில் தாய் தந்தையின் பெயர்கள் பெரிய அளவில் பிழையாக இருக்கும். இது பிற்காலத்தில் பெரிய பிரச்சனையாக இருக்கும். இதனால் நான் அனுபவிக்கும் சங்கடத்தை நம்மவர்கள் படகூடாது. அதற்குதான் இந்த விளக்கம்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: