தீண்டாமை ஒரு பாவச்செயல், பெருங்குற்றம் என்றெல்லாம் பள்ளிப் பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்தும், "சாதி இரண்டொழிய வேறில்லை", "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று அவ்வையாரும் பாரதியும் பாடிய பாடல்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே, சாதி வாரியான கணக்கெடுப்புக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நேரம்
சாதிகள் உள்ளதடி பாப்பா!
நடப்பவை நல்லதற்கல்ல
கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் இந்திய ராணுவ உயர்மட்டத் தகவல்கள் தலைப்புச் செய்தியாக வருவதும், அதற்கு பிரதமர்ரும் மற்றும் ராணுவத் தளபதியும் விளக்கம் கொடுப்பதுமான நிலை நாட்டின் பாதுகாப்புத் துறையிலும் அரசியல் ஊடுருவியுள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.
மக்களுக்கான அரசா? மக்கள் விரோத அரசா?
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பார்கள் அது போன்றே தமிழக மக்களுக்கு ஒரு பக்கம் மத்திய அரசு ரயில் கட்டண உயர்வு, சேவை வரி உயர்வு , பெட்ரோல் விலை உயர்வு என உயர்த்திக் கொண்டே போக , மறு பக்கம் மாநில அரசோ பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு எனப் பாடாய்ப் படுத்தி வருகிறது.
காலாவதியாகும் காந்தியவழிப் போராட்ட முறை!
நாகரிக சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்படும்போது, உணர்வுகளைக் காட்டி எதிர்ப்பைப் பதிவுசெய்யும் அறவழிப் போராட்ட முறைகளுள் ஒன்றுதான் உண்ணா நோன்பு. இதன்மூலம் ஆட்சியாளர் மற்றும் அதிகார வர்க்கத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதை இந்திய சுதந்திரப் போராட்டப் போராளிகள் நமக்குக் கற்றுத் தந்தனர்.
கிரிக்கெட்டில் ஒளிந்திருக்கும் தேசவிரோதம்
ஆங்கிலேயர்களின் விளையாட்டான மட்டைப் பந்தாட்டம் (கிரிக்கெட்) குறித்து இன்னொரு ஆங்கிலேயரான ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகையில் "11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் கைதட்டி ரசிக்கும் விளையாட்டு" என்றார். சர்வதேச சூதாட்ட கும்பலின் பிடியில் மட்டைப்பந்து வீரர்கள் இருப்பது உலகுக்குத் தெரியும்வரை ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் கிரிக்கெட் குறித்த விமர்சனத்தை யாரும் சீரியஸாக எடுக்கவில்லை.
- «
- Start
- முந்தைய செய்தியை வாசிக்க...
- 1
- 2
- அடுத்த செய்தியை வாசிக்க...
- End
- »
Page 1 of 2
