இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: அறிவிப்புகள் முஸ்லீம்களுடன் கைகுலுக்கல் - கேம்பிரிட்ஜ் - ஒரு விளக்கம்!

முஸ்லீம்களுடன் கைகுலுக்கல் - கேம்பிரிட்ஜ் - ஒரு விளக்கம்!

E-mail Print PDF

முஸ்லீம்களுடன் கைகுலுக்கக் கூடாது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் தனது ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தியொன்று இந்நேரத்தில் வெளியிட்டிருந்தோம். நமக்குக் கிடைத்த செய்தித்தகவலின் அடிப்படையிலேயே அச்செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.

ஆனால், கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் பயிலும் தமிழக மாணவர் ஒருவரை மேற்கோள் காட்டும் நமது வாசகர் ஒருவர் அச்செய்தியின் தொனி வேறானது என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, "முஸ்லிம் பெண்களுடன் கைகுலுக்க நேரும்போது, அவர்களின் கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் கைகுலுக்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என்றே கேம்பிரிட்ஜ்ஜின் அறிவுறுத்தல் தெரிவிக்கிறது. (எங்களுக்குக் கிடைத்த செய்தி மூலத்தில் 'பெண்கள்'  என்ற சொல் இடம்பெறாததால் இப்பிழை நேரிட்டது) பகரமாக, முஸ்லிம் பெண்களுடன் உடல்மொழியில் முகமன் கூறும் வகையில் நடந்துகொள்ளும்படி கேம்பிரிட்ஜ் பல்கலை கழக அறிவுறுத்தல் தெரிவிக்கிறது.

ஆகவே, இந்நேரத்தின் முந்தைய செய்தியினால் தவறான கருத்து வெளிப்பட்டிருந்தால் வருந்துகிறோம்.

சரியான செய்தியை அதன் மூலத்திலிருந்தே பெற்றுத்தந்த எங்கள் வாசகர்  திரு. அனீஸ் அஹமதுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

- இந்நேரம்.காம்

Comments  

 
+4 # அமுமீ 2011-12-29 18:47
உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும் என்ற இந்நேரத்தின் நேர்மை பாராட்டப்பட வேண்டியது.

இந்நேரத்திற்கு எமது பாராட்டுக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Kifayathullah 2011-12-29 23:29
நண்பர் அனிஸ் அஹமத் அவர்களுக்கும், முறையான விளக்கம் அளித்த இந்நேரம்.காம் எடிட்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அனிஸ் அவர்கள் இந்த விளக்கத்தின் முந்தைய செய்தியை என்னிடம் பகிர்ந்த போது, நான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் இணைய தளத்தில் அது தொடர்பாக செய்தி ஏதாவது உள்ளதா என்று தேடி பார்க்கும் போது, டிசம்பர் 14 ஆம் தேதியில் The Daily Mail பத்திரிக்கையின் இணைய தளத்தில், முஸ்லிம் மாணவியர் மற்றும்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Kifayathullah 2011-12-29 23:32
மாற்று திறனாளிகளின் (உதாரணதிற்கு, கை ஊனமுற்றவர்) மத மற்றும் மன உணர்வுகள் புண்படும் என்று தெரிந்தால் அவர்களிடம் கை குலுக்குவதை தவிர்த்து கொள்வது நல்லது என்று பல்கலைகழக ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது தெரிய வந்தது. இந்த செய்தி தான் இந்நேரம்.காம் செய்தி தளத்தில் சற்று மாறுதலுடன் வெளிவந்ததை அறிந்தோம். Cambridge பல்கலைகழகத்தில் என்னுடன் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் பயில்கின்றனர், அவர்களிடம் கை குலுக்க கூடாது என்று பகிரங்கமாக பல்கலைகழகம் அறிவிப்பதற்கு வாய்ப்பு இல்லை. உலகின் மிகச்சிறந்த பல்கலைகளில் முதலிடம் வகிக்கும் ஒரு கல்வி மையம் இவ்வாறு செய்தால், அது அந்த கல்வி மைய்யத்திற்கு நல்ல பெயர் ஈட்டாது. இது என்னுடைய கருத்து, மாற்று கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Anis Ahamed 2011-12-30 12:49
இந்நேரம்.காம். நல்ல சுவை தரக்கூடிய கனிகளைப் பெற்ற மரம். அல்ஹம்துலில்லாஹ். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாசகரின் கருத்துக்களை ஆராய்ந்து, பிழைகளைக் கண்டறிந்து, தெளிவான பதிலை, சரியான செய்தியை சமர்ப்பித்துள்ள இம்முயற்சிக்கு ஆசிரியக்குழு சகோதரர்களுக்கு மிகவும் நன்றி. மேலும் நல்ல வளர்ச்சி அடைவதற்கு பிரார்த்தனை செய்கிறேன்
இப்படிக்கு
அனிஸ் அஹமது
பதில் | Reply with quote | Quote
 
 
0 # மாலிக் கான் 2011-12-30 20:33
சகோதரர் அனீஸ் அகமதும்... இந்நேரம் இணையதள எடிட்டரும் பாராட்டப்படவேண்டியவர்களே...

எதிர்வரும் காலங்களிலும் இப்படிப்பட்ட மத உணர்வுகளைத் தூண்டிவிடும் செய்திகளிலிருந்து எச்சுரிக்கையாக செயல்படுங்கள்...

அருமையான செய்திகளையும்.. தகவல்களையும் தரும் இந்நேரம் இணையதளம் மென்மேலும் வளரட்டும்...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # அன்வர் சுனாஸ் 2011-12-31 10:57
நிதானத்துடன் இருங்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Meeran 2012-01-06 15:13
It's OK, why the old entry is still here?
Pls remove the old post(wrong informed) as soon as possible.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # usman 2012-01-25 10:14
masha allah masha allah.wishes for inneram news keep it up.true always victory
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Aslam 2012-03-06 04:25
Atleast from now on dont make such mistakes as it hurts billions of muslims.thanks for accepting this.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Siraj 2012-03-06 20:59
Dear Moderator,

If you've got the correct source and corrected your news, why don't you remove the previous news from your website? Or else, why don't you correct it atleast? Is it not possible?

It would be really great, if you can correct the previous message as well. Thanks much. Hope you understand.

-Siraj
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Ansary 2012-03-12 11:12
This is called Journalism.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)