ஐக்கிய அரபு அமீரகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

3385

துபாய் (27 ஜுன் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு டெல்டா வகை கொரோனா வைரஸும் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இன்று, ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

மேலும் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா பரவல் 2,000 திற்கும் அதிகமாக காணப்படுகிறது.

நேற்று, சனிக்கிழமை மட்டும் 10 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே 2 முறை தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய முடியும் என்கிற நிலையில், இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமான போக்குவரத்து இதுவரை தொடங்கப் படவில்லை.

வரும் 7 ஆம் தேதிக்குப் பிறகு விமான போக்குவரத்து தொடங்குவது குறித்து முழு விவரம் தெரியவர வாய்ப்புள்ளது.