ஸ்மார்ட் போன்களால் ஏற்படும் உடலியல் தீமைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

January 22, 2018
பகிருங்கள்:

ஸ்மார்ட் போன்கள் தற்காலத்தில் அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் இதனால் உடலியல் ரீதியாக அதிக பாதிப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் போன்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை என்றபோதிலும், தோல் வியாதிகள், விரல்களின் திசுக்கள் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அதிக அளவில் தோல் நோய் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவரகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை தோல் மருத்துவர் டாக்டர் ஜி. மன்மோகன் தெரிவிக்கையில் ஸ்மார்ட் போன்களில் அதிகமாக கட்டை விரல்கள் உபயோகிக்கப்படுவதால், தோல் தடிமன், மற்றும் தோல் உணர்ச்சியற்று போகுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் போன் உபயோகத்தால் விரல்கள் பாதிப்புக்குள்ளாகி நாள் ஒன்றுக்கு 6 நோயாளிகள் அவரிடம் சிகிச்சை பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது மருத்துவர் டாக்டர் பி.ராமச்சந்திர மூர்த்தி தெரிவிக்கையில், ஸ்மார்ட் போன்கள் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் தோல் நிரந்தரமாக சேதமடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்தில் ஸ்மார்ட் போன்களில் உள்ள பயோமெட்ரிக் வசதி அதிகம் பிரபலமடைந்து வருகிறது. இதனால் கையில் உள்ள ரேகைகள் சேதமடைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!