இருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது!

January 29, 2018
பகிருங்கள்:

இருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது என்று குழந்தைகள் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் சதீஷ் தேஜ்பூரி கூறுகையில்," இருமல் உடலில் பருவகால மாற்றங்கள் அல்லது கிருமி தொற்று, ஒவ்வாமை ஆகியவற்றால் வரக்கூடியது. இதற்கு இருமல் மருந்துகள் உட்கொள்வது சரியானதல்ல. இருமல் மருந்துகள் எடுத்துக் கொள்வதால் இதயத்துடிப்பு அதிகரித்தல் உள்ளிட்ட அசவுகரியங்கள் வர வாய்ப்புள்ளது. மேலும் இதனை சிலர் உட்கொள்வதால் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய அளவுக்கு அடிமையாகவும் வாய்ப்புள்ளது." என்றார்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது என்று குழந்தைகள் மருத்துவர்களை டாக்டர் சதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை பரிந்துரைத்து எந்த மருத்துவ ஆய்வு நூல்களிலும் இல்லை என்றும் டாக்டர் தேஜ்பூரி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருமல் மருந்துகள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் முஜாவர், மற்றும் இந்திய குழந்தைகள் அகாடமி தலைவர் டாக்டர் நிலோஃபர் ஆகியோர் இதையே வலியுறுத்தியுள்ளனர்

Doctors claim that cough syrups have negative impacts on the health of children and it should not be prescribed.

தற்போது வாசிக்கப்படுபவை!