பிடர் கொண்ட சிங்கமே பேசு - கருணாநிதிக்கு வைரமுத்து கவிதை!

மார்ச் 04, 2018 1314

திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிப்பேரரசு வைரமுத்து உருக்கமாக ஒரு கவிதை எழுதியுள்ளார்.

பிடர் கொண்ட சிங்கமே பேசு!

இடர்கொண்ட தமிழ்நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
பிடர்கொண்ட சிங்கமே பேசு


சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து


யாதொன்றும் கேட்கமாட்டேன்
யாழிசை கேட்கமாட்டேன்
வேதங்கள் கேட்கமாட்டேன்
வேய்க்குழல் கேட்கமாட்டேன்


தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே
நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்


இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்


சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து...

இவ்வாறு வைரமுத்து கருணாநிதிக்கு கவிதை எழுதியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...