சர்(க்)கார் - கவிதை

நவம்பர் 09, 2018 1288

ஊழல் எதிர்ப்பு நாயகன்
ஒளித்துவைக்க உதவுகிறான்

சில முறைகேடுகளை
சில தந்திரங்களை
சில கேவலங்களை
இன்னும்
சில ஊழல்களையும்.

கற்பனையில் வடித்த
காட்சிகளில்
புளகாங்கிதமுற்று
கைத்தட்டும் விடலைகள்
அறிவதில்லை
திருடப்பட்ட கதையில்
ஜென்ம சாபல்யம் அடைகையில்
எளிதாகத் தப்புகின்றன
எத்தனையோ பெருமுதலைகள்
என்பதை.

- இ.ஹ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...