காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்

பிப்ரவரி 21, 2019 738

காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
வந்தோரை வாழவைக்கும் பட்டணம்!!
வயதோரை மதிக்கும் பட்டணம்!!
விருந்தோம்பல் சிறக்கும் பட்டணம்!!
வருங்காலம் நோக்கும் பட்டணம்!!
வியாபாரம் பெருகும் பட்டணம்!!
விழுந்தோரை உயர்த்தும் பட்டணம்!!

காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
கள்ளுக்கடை இல்லா பட்டணம்!!
காவல்நிலையம் வேண்டா பட்டணம்!!
கள்ள செயல் காணா பட்டணம்!!
கண்ணியத்தை காக்கும் பட்டணம்!!
கல்விமான்கள் சூழ்ந்த பட்டணம்!!
கருமங்கள் கரைந்த பட்டணம்!!

காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
பழிபாவம் கூடா பட்டணம்!!
பந்தம் பாசம் பிணைந்த பட்டணம்!!
பஞ்சத்தை பார்க்கா பட்டணம்!!
பாவத்தை செய்யா பட்டணம்!!
பகைமுகம் நோக்கா பட்டணம்!!
பங்காளிகள் சூழ்ந்த பட்டணம்!!

காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
கடற்கரை பூங்கா பட்டணம்!!
கலங்கரை விளக்க பட்டணம்!!
கஞ்சத்தனம் இல்லா பட்டணம்!!
காவியங்கள் பேசும் பட்டணம்!!
கால்பந்து விளையாடும் பட்டணம்!!
களரி சோறு மனக்கும் பட்டணம்!!

களரி சோறு மனக்கும் பட்டணம்!!
காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
சாலை சந்துகள் கொண்ட பட்டணம்!!
சாதி மதம் பாரா பட்டணம்!!
சரித்திர பொக்கிஷ பட்டணம்!!
சங்கத் தமிழ் பேணும் பட்டணம்!!
சண்டைகள் குறைந்த பட்டணம்!!
சகோதரத்துவம் பேணும் பட்டணம்!!

காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
இறை இல்லம் நிறைந்த பட்டணம்!!
இறைமறை ஒலிக்கும் பட்டணம்!!
இம்சைகள் குறைந்த பட்டணம்!!
இனிமைகள் நிறைந்த பட்டணம்!!
இயற்கையை பேணும் பட்டணம்!!
இரக்க குணம் கொண்ட பட்டணம்!!

காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
பெண்ணியத்தை போற்றும் பட்டணம்!!
பெற்றோரை காக்கும் பட்டணம்!!
செல்வங்கள் கொழிக்கும் பட்டணம்!!
தர்மங்கள் செழிக்கும் பட்டணம்!!
பெருநாள்கள் சிறக்கும் பட்டணம்!!
பெருமானார் வழி நடக்கும் பட்டணம்!!

காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
தந்தை சொல் மதிக்கும் பட்டணம்!!
தாய் பாசம் துதிக்கும் பட்டணம்!!
திரையரங்கம் இல்லா பட்டணம்!!

- அபூபக்கர் சித்திக்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...