இந்தக் கண்களுக்கு வேண்டும் இனியதொரு நீதம்...(கவிதை)

மார்ச் 08, 2019 389

கண்டவை அனைத்தும் கனவுகளாய் மாற
காணாதவை அனைத்தும் காட்சிகளாய் கண் முன்னே ...

ஆட்சியைக் கண்டோம் - அரசைக் காணோம்
அநீதியைக் கண்டோம் - நீதியைக் காணோம்
அரசியல் வாதியைக் கண்டோம் - பொதுநலத்தைக் காணோம்
ஆதிக்கத்தைக் கண்டோம் - அமைதியைக் காணோம்
அதிகாரிகளைக் கண்டோம் - கடமையைக் காணோம்
அழிவைக் கண்டோம் - ஆதரவைக் காணோம்
ஆணவத்தைக் கண்டோம் - அறத்தைக் காணோம்

பந்தத்தைக் கண்டோம் - பாசத்தைக் காணோம்
பட்டப்படிப்பைக் கண்டோம் - வேலை வாய்ப்புகளைக் காணோம்
பள்ளிக்கூடத்தைக் கண்டோம் - புத்தியைக் காணோம்
படுக்கையைக் கண்டோம் - உறக்கத்தைக் காணோம்
பண்டிகைக் கண்டோம் - பந்தத்தைக் காணோம்
பிஞ்சுகளைக் கண்டோம் - சிரிப்பைக் காணோம்
பணத்தைக் கண்டோம் – பரிவைக் காணோம்

கல்யாண காட்சிகளைக் கண்டோம் - சொந்தங்களைக் காணோம்
காப்பகத்தைக் கண்டோம் – தாயைக் காணோம்
கார் மேகம் கண்டோம் – மழையைக் காணோம்
கருங்காடு கண்டோம் - மரங்களைக் காணோம்
கல்லூரி வாசல் கண்டோம் - கண்ணியத்தைக் காணோம்
கண்களைக் கண்டோம் - கண்ணீரைக் காணோம்
கணினியைக் கண்டோம் - கணிதத்தைக் காணோம்
சினிமாவைக் கண்டோம் - வெட்கத்தைக் காணோம்

சீரியல்களைக் கண்டோம் - சிரிப்பொலிகளைக் காணோம்
சக்திகளைக் கண்டோம் – பக்திகளைக் காணோம்

மாற்றங்களைக் கண்டோம் – மகிழ்ச்சியைக் காணோம்
மலர்களைக் கண்டோம் – வாசனையைக் காணோம்
மாளிகைகளைக் கண்டோம் - மனிதத்தைக் காணோம்

உணவைக் கண்டோம் - ஊட்டச்சத்தைக் காணோம்
ஊடகத்தைக் கண்டோம் - உண்மையைக் காணோம்
உழைப்பைக் கண்டோம் - ஊதியத்தைக் காணோம்

இளசுகளைக் கண்டோம் - காதலைக் காணோம்
இளைஞ்சர்களைக் கண்டோம் - வெற்றியைக் காணோம்
இலக்குகளைக் கண்டோம் – இயல்பைக் காணோம்

விவசாய புரட்சி கண்டோம் - தண்ணீரைக் காணோம்
வியாபாரத்தைக் கண்டோம் - வாழ்க்கையைக் காணோம்
வறுமையைக் கண்டோம் - பொறுமையைக் காணோம்

போதையைக் கண்டோம் - பாதையைக் காணோம்
நோயைக் கண்டோம் - நிவாரணத்தைக் காணோம்

போலீச் சாமியார்களைக் கண்டோம் - கற்பைக் காணோம்

கண்டதை எல்லாம் காணோம்...

இறைவா,
இந்தக் கண்களுக்கு வேண்டும்
இனியதொரு நீதம்...

-அபூபக்கர் சித்தீக்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...