ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி!

ஜூன் 06, 2019 1408

ரியாத் (06 ஜூன் 2019): ரியாத் தமிழ் சங்கம் நடத்தும் சிறுகதை போட்டிக்கு இம்மாத இறுதிக்குள் புதிய சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பி வளர்ந்த, வளரும், புதிய எழுத்தாளர்கள் பங்குபெறலாம் என்று ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் இலக்கிய அணி சார்பில் நெறியாளர் ஷேக் முஹம்மது ஷாஜஹான் அறிவித்துள்ளதாவது:

ரியாத் தமிழ்ச்சங்கச் சிறுகதைப் போட்டி – 2019

மொத்தப்பரிசு ரூ. 40000/-

இனிய நட்புகளுக்கு,

நலமே! ….மா?

‘பிரமாண்டப்படுத்து…
பிரமாதப்படுத்து…
தனித்துவப்படுத்து!’ – டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வெற்றியின் ஃபார்முலா இது.

நாங்கள் நடத்தும் அனைத்துப் போட்டிகளிலுமே இந்த மூன்றுமே இயல்பாக அமைந்துவிடுகின்றன. எங்களது சிறு அறிவிப்பையும் நீங்கள் பிரமாண்டப்படுத்தி, பிரமாதப்படுத்தி உங்கள் படைப்புகள் மூலம் தனித்துவப்படுத்தி கொண்டாட்டமாக்கி விடுகிறீர்கள். தன்னெழுச்சியாக அதற்குப் பரப்புரையும் செய்யும் உங்கள் அன்புக்கு கோடி நன்றிகள்.

சிறுகதைப் போட்டிக்கான பரிசுகள்:

முதல் பரிசு - ரூ. 10,000

இரண்டாம் பரிசு - ரூ. 7,500

மூன்றாம் பரிசு - ரூ. 5,000

ஆறுதல் பரிசு

தலா ரூ. 1,500 (5 பேருக்கு)

மொத்தப் பரிசுத்தொகை ரூ.40,000 (சான்றிதழ் + பரிசுக்கேடயங்கள் உட்பட)

போட்டியின் விதிமுறைகள் :

1.சிறுகதை இந்தப் போட்டிக்காகப் புதிதாக எழுதப்பட்டதாக இருக்கவேண்டும்.

2.சிறுகதைகள் நறுக்குத் தெறித்தாற்போல் 1200 வார்த்தைகள் முதல் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் நலம்.

3.ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்பலாம். இரண்டாவது சிறுகதை அனுப்பினால் முதல் சிறுகதை மட்டுமே போட்டியில் ஏற்கப்படும். நீங்கள் எழுதிய சிறுகதைகளில் எது சிறந்தது என்று நீங்களே நடுவராய் இருந்து அதைத் தேர்வு செய்து அனுப்புங்கள்.

4.ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவினர் அவர்தம் குடும்பத்தினர் போட்டியில் கலந்துகொள்ள அனுமதியில்லை

5.போட்டி முடிவு அறிவிக்கப்படும்வரை சிறுகதையை முகநூல் உள்ளிட்ட வேறு ஊடகங்களில் பயன்படுத்தக்கூடாது. பரிசு பெறும் சிறுகதைகளை தனிப்புத்தகமாக வெளியிடும் உரிமை ரியாத் தமிழ்ச்சங்கத்துக்கு உண்டு.

6.அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கும் உரிமையும், போட்டி விதிமுறைகளை சூழலுக்கேற்ப மாற்றவும் ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கு உரிமை உண்டு.

7.போட்டிக்கான சிறுகதைகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறுகதை, போட்டியில் ஏற்கப்பட்டதற்கான ஒப்புதல் அனுப்பி வைக்கப்படும்.

8.சிறுகதைப் போட்டி மே 31 அன்று இரவு 21 : 00 மணிக்கு ஆரம்பித்து, ஜூன் 30 நள்ளிரவு 00 : 00 மணியுடன் முடிவடைகிறது. அதற்கு மேல் அனுப்பும் சிறுகதைகள் போட்டியில் ஏற்கப்படாது.

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...