பத்திரிக்கை துறை 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை செயலாளர் உதய் வர்மா அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி, இணைய தளம் போன்ற மின்னணு ஊடகங்கள் வளர்ந்து வருகின்ற நிலையிலும் பத்திரிகைகளுக்கான வரவேற்பு சிறப்பாகவே இருந்து வருகிறது. மின்னணு ஊடகங்கள் மக்களை முழுமையாக திருப்திப்படுத்த போதுமானதாக இல்லாத நிலையில் பாமர மக்களிடையே பத்திரிகை தேவையாக உள்ளது. அந்த வகையில் மின்னணு ஊடகங்களின் வளர்ச்சி பத்திரிகை துறையை அதிகம் பாதிக்கவில்லை என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் உதய் வர்மா கூறியுள்ளார்.
மேலும், "அதேசமயம், மேலை நாடுகளில் மின்னணு ஊடக வளர்ச்சியின் காரணமாக பத்திரிகை துறை சரிய தொடங்கியுள்ளது. தற்போது நம் நாட்டில் 800 தொலைக்காட்சி சேனல் உள்ளன. புதிதாக மேலும் 200 சேனல்கள் வர உள்ளன" என்று உதய் வர்மா கூறியுள்ளார்.
-க.கா.செ