ரியாத்(13 அக். 15): சவூதியில் தமிழகப் பணிப்பெண் கைதுண்டிக்கப்பட்ட விவகாரத்தில், வீட்டு உரிமையாளரால் கைவெட்டப்பட்டதா அல்லது விபத்தா என்பது குறித்து தங்களுக்கு விவரம் எதுவும் தெரியாது என இந்தியன் சோசியல் ஃபாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

அம்மான்(12 அக்.2015): ஜோர்டானில் மகாத்மா காந்தி பெயரில் சாலை ஒன்றினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.

ரமல்லா: இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பாலஸ்தீன் சென்றடைந்தார்.  மூன்று நாள்கள் அரசுப் பயணமாகச் சென்றுள்ள குடியரசுத் தலைவர், ஒரு நாள் பயணமாக பாலஸ்தீன் சென்றுள்ளார்.

ரியாத்(12 அக். 15): சவூதியில் வீட்டுப் பணிப்பெண் கைவெட்டப் பட்ட சம்பவம் உண்மையே என்று இந்தியன் சோசியல் ஃபாரம் உறுப்பினர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

துருக்கி(11 அக். 15): அங்காராவில் நடந்த ஊர்வலத்தினிடையே இரட்டை குண்டுவெடிப்பு நடக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அங்காரா(10 அக். 15): துருக்கி தலைநகர் அங்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி மீதான குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

சிரியா(10 அக். 15): சிரியாவில் அமெரிக்காவின் உதவியுடன் அதிபர் அசதுக்கு எதிரான படை மீது ரஷ்யா சராமரியாக வான் தாக்குதல் நடத்திவரும் வேளையில் இதற்கு எதிர்வினையாற்ற முடியாமல் அமெரிக்கா திணறுகிறது.

அங்காரா(10 அக்க். 15): துருக்கி தலைநகர் அங்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணியில் குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜித்தா (10 அக்.2015): சவூதி அரேபியா ஜித்தா இந்தியா ஃபெடர்னிட்டி பாரம் சார்பில் சமகால இந்தியா என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யமன் : யமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில்  குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Search!