அமெரிக்க நகரசபை துணை செய்தி தொடர்பாளர் மேரி ஹர்ப் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, "அமெரிக்கா, எகிப்து நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளோடு நல்ல ஈடுபாட்டினை கொண்டுள்ளது" என திட்டவட்டமாக அறிவித்தார்.

டமாஸ்கஸ் நகரத்திற்கு அருகே உள்ள கோடா  போராளி பகுதிகளில் கிழக்கு சிரியா அரசாங்கத்தின் வான் தாக்குதலில் 66க்கும் அதிகமான மக்கள் இறந்ததாக சிரியா நாட்டின் மனித உரிமை கழகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன்: இஸ்ரேல் அரசையும் அதன் பிரதமரையும் சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்த அந்நாட்டின் வெளிநாட்டு தூதரர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் மீது கல் எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ரமல்லாஹ் நகரில் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன் சிறுமி அல் கதீபிற்கு 1528 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டதோடு இரண்டாவது முறையாக காவல்நீட்டிப்பு செய்து இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெய்ரோ:  எகிப்தின் மக்கள் கட்சி உறுப்பினர் அகமது டோமாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 17 மில்லியன் எகிப்து பவுண்டு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ராணுவ தாக்குதலில் பாதிக்கப்பட்ட காஸா குடும்பங்களுக்கு எண்ணெய் வளமிக்க சவுதி அரசாங்கம் 13.5 மில்லியன் நிவாரண நிதி அளித்துள்ளது.

ரக்கா (சிரியா) : தாங்கள் பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த ஜோர்டானிய விமானி முஆதை உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டதாக ஐசிஸ் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அபுதாபி : மனித குலத்திற்கு உதவிகள் அளிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் உலகளவில் முன்னணியில் இருப்பதாக துணை அதிபர் ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

அம்மான்: விமானிக்கு பதிலாக ஐ எஸ் கைதியை விடுதலை செய்ய ஜோர்டான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

அல்-ஹலீல்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் அதிரடியாக வெளியிட்டுள்ள இராணுவக் கட்டளைக்கு அமைய பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான பெருநிலப்பரப்பு சட்டவிரோதமாக அபகரிக்கப்படவுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!