ஜித்தாவில் நடைபெற்ற தமிழர்கள் விழா!

February 01, 2018

ஜித்தா(01 பிப் 2018): ஜித்தா இந்திய தூதரகத்தில் தமிழர்கள் விழா கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குடியரசு தினத்தன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்திய தூதரகம் மற்றும் சவூதி இந்திய தொழில் தொடர்பு அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த விழாவை ஜித்தா தமிழ் சமூகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

விழாவின் தொடக்கத்தில் மாஸ்டர் உமர் அஹமது திருக்குர்ஆன் வசனம் ஓத அதனை மாஸ்டர் ஃபஹீம் தமிழில் மொழியாக்கம் செய்தார். அதனை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய கீதமும், சவூதி தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

திரு. இப்ராஹிம் மரைக்கார் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசினார். இந்திய கன்சுல் ஜெனரல் நூர் ரஹ்மான் சேக் மற்றும் அவரது மனைவி மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தமிழர்கள் பண்பாட்டின்படி திரு சிராஜ் அவர்களால் வரவேற்பு பூங்கொத்து அளிக்கப்பட்டது.

பின்பு கன்சுல் ஜெனரல் நூர் ரஹ்மான் சேக் தமிழர்களின் பண்பாடுகள் குறித்தும் அவர்களது உபசரிப்பு குறித்தும் பாராட்டி பேசினார்.

விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக திருமதி புஷ்பா சுரேஷ் அவர்களால் பயிற்றுவிக்கப்படட மயிலாட்டம், திருமதி மைதிலி, திருமுரளி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய பண்பாட்டின் சிறந்த வல்லுநர்களை அவர்களது தோற்றத்துடன் ஆடை வடிவமைப்பு குழந்தைகள் நிகழ்ச்சி. குழந்தைகள் நடன நிகழ்ச்சி, மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சி,. இன்னும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவையொட்டி தூதரக வளாகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பேனர், ஜல்லிக்கட்டு, திருவள்ளுவர் பேனர், உள்ளிட்டவைகள் அரங்கை அலங்கரித்தன.

மேலும் தமிழக பண்பாட்டு பல்வேறு நாட்டியங்கள் கோவை கணேஷ் தயாரிப்பில் லுங்கி டான்ஸ், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டிங்களும் முக்கிய பங்கு வகித்தன.

நிகழ்ச்சியின் இறுதியில் திரு ஷரீப் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இரவு 10:30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. சுமார் 1500 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!